Tuesday, June 06, 2006

இசை தந்த சுகம்




இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக சந்தோசம் கொள்கின்றேன் .
இசை என்னைச்சுமக்கின்றது.

இன்பத்தில் தவழ வைக்கின்றது.
என்னை இசையின் பக்கம் வர..வழைத்தது என் தந்தையே..

அப்பாவுக்கு இசை என்றால் போதும். அதனுடன் இணைந்து கொள்வார்.
அப்போது தான் நான் அப்பாவின் மடியில் இருந்து கேட்க ஆரம்பித்த இசை இன்றும் அதனுடன் கரைந்து கொண்டு இருக்கின்றேன்.

புலம் பெயர்ந்த போதுதான் உறவுகளை தேடுவதும். சொந்தங்கள் நண்பர்கள் என தேடிக்கொண்டே இருக்கின்றோம்.

நாம் ஆறுதல் கொள்ள ஒரு நிழல் தேடுகின்றோம். சரி.நாம் தேடிச்செல்பவர்களும் அதே.. நிலை தானே..அவர்களிடம் நாம் எதுவும் எதர்பார்த்து. பின்

கிடைக்க வில்லை என்றதும் மேலும் மேலும் துண்பங்களை வரவழைத்து. துவண்டு போய் விடுகின்றோம்.

எத்தனை இடர் பாடுகள் துண்பங்கள் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

காரணம் தனிமை இந்த நான்கு சுவர் தந்த தனிமைதான்.

காரணம் மனதில் சுமை பிரிந்த தாய் தந்தை காணத்தவிக்கும் நண்பர்கள் காதலன் காதலி அப்படி ஒவ்வொரு வடிவங்களில் மனதில் தாக்கம் ஏக்கம் நோய் என பல வடிவங்கள்.

அத்தனைக்கும் ஓரே..மருந்து இசை

முழு மையாக மாறா விட்டாலும் அந்த நிமிடமாவது லேசாக மறவைக்குதல்லவா.

வாழ்வில் பிரச்சனை முடிவில்லாத தண்டவாளம். தனிமையில் இருக்கும் போதுதான். கடந்த கால நினைவுகள் நம்மை சுற்றி வட்டமிட்டு கண்ணில்நீர்... பெருகச்செய்கின்றது.

அப்போது...சுமைகளை இறக்கி வைக்க சுகமான பாதை எது...? இசை தான்

இசை இன்பங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கும்.

மனதை சுகப் படுத்திக் கொண்டே..போகும் . நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ..அதுக்கேற்றவாறு பாடல்களை தெரிவு செய்து கேட்க்க கற்றுக்கொள்ளுங்கள்.

அதன் விளக்கத்தை புரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு வரிகளாக ரசித்தக் கேளுங்கள் அதனுடன் அமர்ந்துகொள்ளுங்கள்.

மனதை இசைக்கு திருப்புங்கள் அங்கும் இங்கும் மனதை ஓட விட்டு பாடலை ரசித்தால் அது உப்பில்லாத உணவு போல்.

அதனுடன் மூழ்கிப்பாருங்கள் மனம் சுகம் அடைவதை காண்பீர்கள்.

தூக்கம் கொள்ளும் போதும் காதின் அருகில் பிடித்த இசையை ஒளிக்க விட்டு அதனுள் மனதை கொடுத்து தூக்கம் கொள்ளுங்கள் அப்போது உங்கள் மனமும் உடலும் சிறிது நேரமாவது சுகம் கொள்ளும்.


சுமைகளை உறக்கத்திலும் சுமந்தால் நம்மை அறியாமலே.. நாம் நோய்க்கு அடிமையாகி விடுவோம்.

நேரம் கிடைக்கும் போது..இசையோடு இனைந்து கொள்ளுங்கள் அந்த நிமிடமாவது.
நாம் சந்தோசம் அடையலாம்.

சரி பாடல் தரும் சுகம் அதை எப்படி கருத்தோடு அனுபவிப்பது.
என்பதை பாருங்கள்.

படம் ---நீங்கள் கேட்டவை

பாடியவர். ஜேசுதாஸ் அபிமான பாடகர் இசையில் கலந்து தன்னை அர்ப்பணித்து அனுபவித்து பாடுபவர் .சிறந்த சங்கீத மேதை

பாடல் ---

கனவுகானும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் ஓடங்கள்
துடுப்புக்கூட பாரம் என்று கரையை தேடும் கோலங்கள்.

வாழ்க்கையில் எத்தனை கனவுகள் எதிர் பார்ப்புக்கள் மனிதனை ஆட்டிப்படைக்கின்றது அத்தனையும் கனவுபோல் ஆக்கிவிடுமோ.. என்று ஏக்கம்.
ஓடம் கூட துடுப்பு பாரம் என்று கரையை தேடி
போகும் போது. நாம் மனிதர்களை தேடிப்போக முடியுமா..? சிந்தியுங்கள்.


பிறக்கின்ற போதே....... இறக்கின்ற தேதி...
இருக்கின்றதென்பது மெய்தானே....

பிறப்பில் இறப்பு இருக்கும்போது அந்த இடையில் எத்தனை நாடகம் எத்தனை வேடங்கள்.இந்த இடைவெளியில் நீ..நான் என்னுடையது போட்டிகள் பொறாமைகள். ...ஏன் இந்த இடைவெளியில்தானே..எல்லாம் ஆடுவது


ஆசைகள் என்ன....ஆசைகள் என்ன..
ஆணவம் என்ன உறவுகள் என்பது பொய்தானே..

இந்த இறப்புக்கும் பிறப்புக்கும் நடுவில்தான் ஆசைகள் வளர்ப்பதும் ஆணவத்தை விதைப்பதும்.
பணத்தின் மத்தியில் உறவுகள் பொய்யாய் பேவதும்.
இத்தனைக்குள்தான்.

உடம்பு என்பது.... உடம்பு என்பது உண்மையில் என்னகனவுகள் வாங்கும் பைதானே...

பையுக்குள் நம் உயிர் ஆத்மா..ஆத்மா ஒன்றுதான் அழியாதது .உடல் அழிந்துவிடும் ஆத்மாவை நேசிக்காமல் உடலை நேசிப்பதில் என்ன நிம்மதி.
கனவுகளை நிரப்பி.ஆசைகளை விதைத்து
சாக்கடைபோல் இருக்கும் உடல் பொய்தானே...

ம்...

காலங்கள் மாறும் .....காலங்கள் மாறும்
கோலங்கள் மாறும் வாலிபம் என்பது பொய்தானே.

மானிடப்பிறப்பில் மூண்று காலங்கள்.இதில் வாலிபம் என்பது பொய்தானே...குழந்தைய் என்பது கடவுள் போல். வாலிபம் என்பது.துடிப்பான வயது. அதில் வெக்கம் அறியாது ஒன்றைஅடைய வேண்டும் என்றால் பொய்யாக மாறுவது மட்டும் அல்ல தங்களுக்கு ஏற்றமாதிரி மாற்றிக்கோள்ளும்போது.... இங்கே.. பொய்தான் அதிகமாகி விடுகின்றது.

முதுமைப்பருவம் எல்லாத்துண்பங்களையும் பட்டு உடல் தளர்ந்து ஒரு நிலையில் வாழும் பருவம் இரண்டையும் விட இங்கே வாலிபப் பருவம் தானே.. இந்த வரிகளில் சொல்லப்பட்டது.

தூக்கத்தில் பாதி.... தூக்கத்தில் பாதி....ஏக்கத்தில் பாதி போனது போக...எது மீதி..

மனிதன் பொய்யான பையுக்குள் கனவுகளையும் சுமைகளையும் சுமந்து சுமந்து ஏங்கி ஏங்கி வாழும்போது தூக்கத்தில் பாதிக்காலம் போய் விடுகின்றது.
இருக்கின்ற மீதியில் எது மிஞ்சுவது ஒன்றும் இல்லை கொண்டு வரவும் இல்லை கொண்டு போகவும் இல்லை.

பேதை மனிதனே..பேதை மனிதனே..
கடமை இன்றே செய்வதில் தானே.. ஆனந்தம்.

பற்று வைத்து பாசத்தை நாம் கொடுப்போம் நமக்கு வேண்டாம் நாம் கொடுத்து கடமையை செய்வோம்
அதில் இன்பம் பெறுவோம்.
----------------
இசையோடு வரும் சுகத்தை நான் பல வடிவங்கள் மூலம் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றேன் இசையை ரசியுங்கள் கொஞ்ச நேரமாவது ஓய்வு கிடைக்கும்.

அன்போடு
ராகினி
ஜேர்மன்.

rpiria@aol.com