Friday, October 13, 2006

அன்பே.. ஆருயிரே ஆசை பூங்கொடியே..

எனக்குப் பிடித்த பழைய பாடல்களை எனது கவிதைகளுடன் கேட்க கீழ்வரும் இணைப்புகளை அழுத்துங்கள்... [NEW]

என்றும் இனியவை-1

என்றும் இனியவை-2

இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்


http://clearblogs.com/piriyaa/


பாடல்
அன்பே.. ஆருயிரே ஆசை பூங்கொடியே..


இந்தப்பாடல் ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடு.
காதலன் தன் காதலியை கானும் வரை அவன்
உருகிப் பாடும் நிலையை அருமையாக இசையில் கொண்டு வந்துள்ளார்கள்


எந்தஒரு ஏக்கத்தையும் தீர்த்து தருவது இசை ஒன்றேதான்.

அன்பே ஆருயிரே..ஆசைப்பூங்கொடியே
உன்னை பார்ப்பதற்கே..
உயிரே உருகுது என் மனமே.
ஜீவன் ஓயும் முன்னே..
நான்..வருவேன்உன்னிடமே..


இருமனம் இனைந்து விட்டாலே
அங்கே காதல் விளக்கெரிய ஆரம்பித்து விடும்.
காதலுக்கு,அழகு இருக்கா,பணம் இருக்கா,ஏன் குணம் இருக்கா, உண்மை இருக்கா,என்று சரியான தீர்மாணம் எடுப்பதற்குள் ஒருவரை ஒரவர் சந்தித்ததும்
சிந்திக்கமுன் காதல் மலர அரம்பித்துவிடும் ஏன் தூரம் கூட அருகில் இருப்பதுபோல் நிலை மாறுவிடும்.
இந்த நிலை மாற்றத்தின் ஏக்கம் தான் இந்தப்பாடல் தருகின்றது

நெஞ்சம் அழிந்தாலும் உண்மைக்காதல்
நேசம் அழியாது பொண்மானே
உன்னை நினைத்தே நான் ஓடாய் தேய்ந்தே..
உருவம் குலைந்தே...தான போனேனே.
என்காதலின் சின்னமே..ஏங்காதே..
என் அன்னமே..
மண்ணில் நான் இங்கே..
மறைந்தாலும்
மயிலே உன் எண்ணம் மறையாது
கண்ணே..என் தேகம் சாய்ந்தாலும்
காற்றாய் உனைத்தேடி வருவேனே.


என் இதயம் அழிந்து போனாலும் நான் உன்மேல் கொண்ட சத்தியக்காதலலும் என் நேசமம்,அழியாது.
நீ.. தூரத்தில் இருந்து என்மீது கொண்ட காதலை நிதைத்துப்பார்க்கையில் பசியும், தூக்கமும் மறைந்து நான் ஓடாய் தேய்ந்து என் உருவம் குலைந்து போகின்றதே ஆனால் நீ.. தவிக்காதே, நீ.. கண்ணீர் சிந்தாதே என் நிலை தடுமாறினாலும் உன்னை பாராது இங்கேயே நான் மறைந்தாலும்,உன்னை காற்ராக.. வந்து சேருவேன் என்று காட்டுகின்றது
இந்த வரிகள்.

தீபம் இல்லாத..கோயில் போலே
தினமும் தவித்தேன் நான் இங்கே
பூக்கள் இல்லாத சோலைபோலே
பொழுதே.. பூங்காற்றே நீ.. அங்கே
உனக்காகவே நானும் உயிர் வாழ்கின்றேன் இன்னுமே..
எனியும் சுமை தாங்க முடியாது
எந்தன் உயிர் கூடும் தாங்காது
உன்னை நான் வந்து பாராமல்

உருகும் என் மூச்சு போனகாதுஇந்த வரிகள் அவன் காதல் வாழ்கை இப்படி சொல்கின்றது.நீ..என்னருகில் வரும் வரை என் வாழ்கை.. ஒரு நருமணம் வீசாத.. பூங்சோலை.
மனம் என்ற மாளிகையில ஒருவர் குடி வந்தாலே அவர்களின் நினைப்பில் இருந்து விட்டு விலத்திச்செல்லமுடியாத நிலையில் தவிக்கும் தவிப்பை மெய் கொண்ட மனம் மட்டும் உணர்ந்து கொள்ளும்.உன்னை பாராதபோதும் உனக்காக உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றேன் இருந்தும் என் இதயம் வலிமை கொள்வதால் என் உயிர் பிரிவதற்குள். உன்னை வந்து. பாராமல் என் உயிர் பிரியாது.
(இது காதல் கொண்ட சத்தியம்) என்ற நம்பிக்கை தருகின்றது இந்த அற்புதம் கொண்ட வரிகள்.

பிரிந்தால் தான் தெரியும் பிரிவின் ஏக்கம்.
அருகில் இருந்தால் அன்பின் வெளிப்பாடு தெரியாதுஎதுவும் தூர இருந்தால் அன்பின் உணர்வுகள் அதன் சத்தியம் புரியும்அதிலும் உண்மை இருந்தால்.

யார் ஒருவரில் முழுமையான அன்பைக் கொடுக்கின்றார்களோ,அவர்களின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீ கூட நிலத்தில் சிந்த விடமாட்டார்கள்அப்போது உணரலாம் அவர்களின் அன்பும் காதலும் எப்படி என்று.
இது என் உள்ளத்தில் மலர்ந்த வரிகள்இந்தப்பாடல் எனக்கு மிகப்பிடித்தபாடலும்

இதே போல் தான் இந்தப்பாடலும்.

படம் கிழிப்பேச்சு கேட்கவா.
இசைஇளயறாஜா


அன்பே...வா.. அருகிலே.
என் வாசல் வழியிலே..உல்லாச மாளிகை மாளிகை
எங்கே.. என் தேவதை தேவதை.

இசைக்கு வசமான.
ராகினி
ஜேர்மன்